தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகக் கிண்ண கிரிக்கெட் தேதி மாற்றம்: ஆகஸ்ட் 25 முதல் டிக்கெட் விற்பனை

1 mins read
4bf34aea-3b34-4d78-b5d9-e0fed1feb720
ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி விருது - படம்: ஏஎஃப்பி

உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி, உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகின்ற 25ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 13வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது.

இப்போட்டிக்கான அட்டவணை கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஆனால் போட்டி அட்டவணை வெளியான சில நாட்களிலேயே பாதுகாப்பு அம்சங்கள் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ஆட்டங்களின் தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை எழுந்தது.

இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

போட்டி நடைபெறும் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்களில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்