தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்கள் உலகக் கிண்ணம்: ஸ்பெயினுக்கும் இங்கிலாந்துக்கும் நீயா-நானா போட்டி

1 mins read
ccdb25ee-5f4b-42b5-a331-534d2eab8680
இங்கிலாந்தின் மூன்றாவது கோலைப் போடும் அலெசியா ருசோ (வலது). - படம்: ஏஎஃப்பி

சிட்னி: பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வரலாறு படைக்கும் யுத்தத்தில் இறங்கியுள்ளன ஸ்பெயின், இங்கிலாந்து. இவ்விரு அணிகளும் இவ்வாண்டுப் போட்டியின் இறுதியாட்டத்தில் மோதவிருக்கின்றன. இரண்டும் இதுவரை பெண்கள் உலகக் கிண்ணத்தை வென்றதில்லை.

புதன்கிழமையன்று நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் இரு நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது இங்கிலாந்து. ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் இங்கிலாந்தை முன்னுக்கு அனுப்பினார் எலா டூன். பிறகு 63வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் ஆஸ்திரேலியாவின் சாம் கெர்.பின்னர் 71வது நிமிடத்தில் லாவ்ரன் ஹெம்ப் இங்கிலாந்தை மீண்டும் முன்னுக்கு அனுப்பினார். 86வது நிமிடத்தில் இங்கிலாந்தின் மூன்றாவது கோலைப் போட்டார் அலெசியா ருசோ.

முன்னதாக நடைபெற்ற மற்றோர் அரையிறுதியாட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் சுவீடனை வென்றது ஸ்பெயின். இனி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதியாட்டத்தில் கிண்ணத்தை முதன்முறையாக வெல்ல ஸ்பெயினும் இங்கிலாந்தும் போட்டியிடும்.

குறிப்புச் சொற்கள்