தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசியக் கிண்ணம்: இந்திய அணியில் ராகுல், ஷ்ரேயாஸ்

1 mins read
6475f993-d415-404d-884d-8f746fccd7e1
அயர்லாந்திற்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய அணி 33 ஓட்டங்களில் வெற்றிபெற்றது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 17 பேர் கொண்ட அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார். கே எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் காயத்திலிருந்து மீண்டு, அணிக்குத் திரும்பியுள்ளனர். சஞ்சு சாம்சன் தயார்நிலை வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான், நேப்பாளம், பங்ளாதேஷ், இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் என மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இப்போட்டி, ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி நிறைவுபெறுகிறது.

பாகிஸ்தானில் நான்கு போட்டிகளும் இலங்கையில் ஒன்பது போட்டிகளுமாக இப்போட்டித் தொடர் நடத்தப்படுகிறது.

இதனிடையே, அயர்லாந்திற்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய அணி 33 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (தலைவர்), ஷுப்மன் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், முகம்மது ஷமி, இஷான் கிஷன், ஷார்துல் தாக்குர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா.

குறிப்புச் சொற்கள்