விருது வென்ற ஷேக் ஃபர்ஹான், ஃபெங் தியன்வெய்

1 mins read
dcb1362f-efa9-4a6e-b0a5-868d26a494c6
விருது வென்ற ஃபெங் தியன்வெய், ஷேக் ஃபர்ஹான் ஷேக் அலாவுதீன் (வலது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்: மலாய் தற்காப்புக் கலை சீலாட் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் ஷேக் ஃபர்ஹான் ஷேக் அலாவுதீன் முதல்முறையாக ஆகச் சிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்றுள்ளார்.

சிங்கப்பூர் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமையன்று ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

25 வயது ஃபர்ஹான் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூருக்காகத் தங்கம் வென்றார்.

அதுமட்டுமல்லாது, நான்காவது முறையாக உலக சீலாட் போட்டியில் மாபெரும் பட்டத்தை அவர் இவ்வாண்டு வென்றார்.

சிங்கப்பூருக்காகத் தங்கப் பதக்கங்கள் வெல்வதில் கவனம் செலுத்தப்போவதாக ஷேக் ஃபர்ஹான் கூறினார்.

இவர் 2019ஆம் ஆண்டில் ஆகச் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதை வென்ற சிங்கப்பூர் சீலாட் சம்மேளனத் தலைவர் திரு ஷேக் அலாவுதீன் யாக்கோப் மரிகான் ஆவார்

திரு ஷேக் அலாவுதீனும் ஒரு காலத்தில் சிங்கப்பூருக்காகப் பல பதக்கங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஆகச் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை உள்ளூர் மேசைப்பந்து நட்சத்திரம் ஃபெங் தியன்வெய் நான்காவது முறையாக வென்றுள்ளார்.

36 வயது ஃபெங், இவ்விருதை 2010, 2013, 2018ஆம் ஆண்டுகளில் வென்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுகளில் ஃபெங் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இவர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் குழுப் பிரிவில் ஃபெங் வெண்கலம் வென்றார்.

குறிப்புச் சொற்கள்