ஒன்பது இடங்கள் ஏற்றம் கண்ட பிரக்ஞானந்தா

ஒன்பது இடங்கள் ஏற்றம் கண்ட பிரக்ஞானந்தா

படம்: இபிஏ

26 Aug 2023 - 2:40 pm

1 mins read

சென்னை: இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகச் சதுரங்கத் தரவரிசையில் 20ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளார்.

அண்மையில் ஹங்கேரியில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் இறுதிச்சுற்றுவரை சென்று போராடித் தோற்ற 18 வயது பிரக்ஞானந்தா, தரவரிசையில் ஒன்பது இடங்கள் முன்னேறினார்.

சென்னையில் பிறந்தவரான இவர், தற்போது இந்திய அளவில் டி.குகேஷ், விஸ்வநாதன் ஆனந்திற்கு அடுத்து மூன்றாவது நிலையிலுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
சதுரங்கம்பிரக்ஞானந்தாதரவரிசை