தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ருபியாலேஸைப் பதவி விலகக் கோரும் ஸ்பானியக் காற்பந்துச் சம்மேளனம்

1 mins read
70e0cc41-e8d8-40ee-bc0b-2be0c337bbe8
உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பானிய மகளிர் அணியின் தற்காப்பாளர் ரோசியோ கால்வேஸைக் கட்டியணைத்து வாழ்த்து கூறிய லுயிஸ் ருபியாலேஸ் (வலது). - படம்: ஏஎஃப்பி

மட்ரிட்: அண்மையில் மகளிர் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை ஏந்தியது ஸ்பானிய குழு.

ஸ்பானிய குழு வெற்றி பெற்றதும் அதன் ஆட்டக்காரர்களில் ஒருவரான ஜென்னி ஹெர்மோசோவின் உதட்டில் ஸ்பானிய காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் லுயிஸ் ருபியாலேஸ் முத்தமிட்டார்.

இது ஏற்றக்கொள்ள முடியாத செயல் என்று கூறிய ஸ்பானிய காற்பந்துச் சம்மேளனம், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ருபியாலேஸைப் பதவி விலகக் கோரியுள்ளது.

ருபியாலேஸின் செயல் பாலியல் குற்றமாகக் கருதப்படக்கூடும் என்றும் அதுகுறித்து விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும் ஸ்பானிய அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு எதிராக அடுத்த 15 நாள்களுக்குள் வழக்கு தொடுக்க ஹெர்மோசோவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிண்ணம் ஏந்தும் விழாவின்போது ருபியாலேஸ் தமது உதட்டில் முத்தமிட்டபோது பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் போல உணர்ந்ததாக ஹெர்மோசா தெரிவித்திருந்தார்.

தமது உதட்டில் முத்தமிட ருபியாலேசுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றார் அவர்.

ஆனால் ஹெர்மோசா அனுமதி தந்ததாக ருபியாலேஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்