தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோல்வியில் இருந்து தப்பிய ஜோக்கோவிச்

1 mins read
ca2a391a-2003-4f4f-8ad8-a9593c734449
வெள்ளிக்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் தமது சக நாட்டவரான செர்பியாவின் லாஸ்லோ ஜேருடன் மோதினார் ஜோக்கோவிச். - படம்: இபிஏ

நியூயார்க்: டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச் தோல்வியின் பிடியில் இருந்து தப்பித்து அமெரிக்க பொது விருதின் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் தமது சக நாட்டவரான செர்பியாவின் லாஸ்லோ ஜேருடன் மோதினார் ஜோக்கோவிச்.

லாஸ்லோ சிறப்பாக ஆடி முதல் இரண்டு ஆட்டங்களையும் 4-6, 4-6 என தன்வசப்படுத்தினார்.

அடுத்த மூன்று ஆட்டங்களையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆடிய ஜோக்கோவிச் தமது அனுபவத்தின் மூலம் லாஸ்லோவை திக்குமுக்காட வைத்தார்.

இறுதியில் ஜோக்கோவிச் 4-6, 4-6, 6-1, 6-1, 6-3 என்ற ஆட்டக்கணக்கில் வெற்றிபெற்றார்.

தோல்விக்கு அருகே வரை சென்று பின்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோக்கோவிச்சைக் கண்டு ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள்.

இந்த ஆட்டத்துடன் சேர்த்து ஜோக்கோவிச் 38ஆவது முறையாக 5 ஆட்டங்கள் விளையாடி போட்டியில் வென்றுள்ளார்.

இத்தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் எளிதாக வென்ற ஜோகோவிச்சுக்கு இந்த ஆட்டம் சற்று சவாலாக இருந்ததாகக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ஜோகோவிச் ஞாயிற்றுக்கிழமை இரவு நான்காவது சுற்றில் போர்னோ கோஜொவை எதிர்த்து விளையாடவுள்ளார்.

ஆண்கள் டென்னிஸ் வரலாற்றில் அதிக பொது விருதுகள் வென்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் 36 வயது ஜோக்கோவிச். அவர் இதுவரை 24 முறை பொது விருதை வென்றுள்ளார்.

ஜோக்கோவிச் நான்கு முறை அமெரிக்க பொது விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்