தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இபிஎல்: கோல் இயந்திரத்தின் வேட்டை தொடர்கிறது

1 mins read
b9b36148-17f8-4759-a4b0-336fcca4c19d
பிரிமியர் லீக்கில் இது ஹாலண்டின் ஐந்தாவது ‘ஹாட்ரிக்’ கோல் ஆகும். - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்து லீக்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஃபுல்ஹம் குழுவை 5-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி தோற்கடித்தது. ‘கோல் இயந்திரம்’ எர்லிங் ஹாலண்ட் இந்த ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்தினார். பிரிமியர் லீக்கில் இது அவரது ஐந்தாவது ‘ஹாட்ரிக்’ கோல் ஆகும்.

மற்றொரு லீக் ஆட்டத்தில் பர்ன்லி குழுவை 5-2 எனும் கோல் கணக்கில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் வீழ்த்தியது. தென்கொரிய ஆட்டக்காரர் சோன் ஹியுங் மின், தமது பங்கிற்கு ஸ்பர்சுக்காக ‘ஹாட்ரிக்’ கோல் போட்டார்.

லீக் பட்டியலில் மேன்சிட்டி அதிகபட்சமாக 12 புள்ளிகளைப் பெற்று முதலிடம் வகிக்கிறது. ஸ்பர்ஸ் குழு 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

மறுபக்கம், நடப்பு லீக் பருவத்தின் தொடக்கத்திலேயே செல்சி ஆட்டங்கண்டு வருகிறது. சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் நோட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழுவிடம் 1-0 எனும் கோல் கணக்கில் செல்சி தோல்வி கண்டது.

குறிப்புச் சொற்கள்