பிரைட்டனுக்கு புதுத்தெம்பு தரும் நம்பிக்கை நட்சத்திரம்

பிரைட்டனுக்கு புதுத்தெம்பு தரும் நம்பிக்கை நட்சத்திரம்

1 mins read
c8f0ebff-12d8-497f-9caa-e4c32fb5ac02
பிரைட்டனின் 18 வயது நம்பிக்கை நட்சத்திரமான இவன் ஃபெர்குசன் (திடலில் சறுக்குபவர்) ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

பிரைட்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நியூகாசல் யுனைடெட் குழுவை 3-1 எனும் கோல் கணக்கில் பிரைட்டன் தோற்கடித்தது. இதில் பிரைட்டனின் 18 வயது நம்பிக்கை நட்சத்திரமான இவன் ஃபெர்குசன் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார்.

கடந்த வாரம் நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுவிடம் 3-1 எனும் கோல் கணக்கில் தோல்வியுற்ற பிரைட்டன், நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டெழ உறுதியுடன் செயல்பட்டது.

நான்கு ஆட்டங்களில் விளையாடியுள்ள பிரைட்டன், ஒன்பது புள்ளிகளுடன் லீக் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. மறுபக்கம், தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ள நியூகாசல், வெறும் மூன்று புள்ளிகளுடன் 14வது இடத்தில் தேங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்