ஆண் குழந்தைக்குத் தந்தையான முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்

1 mins read
9cb2884f-039f-46a2-92c3-3af13b600b2f
மனைவி சஞ்சனாவுடன் ஜஸ்பிரீத் பும்ரா. - படம்: இன்ஸ்டகிராம்/சஞ்சனா கணேசன்

மும்பை: முன்னணி இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

இந்த மகிழ்ச்சியான தகவலை தமது இன்ஸ்டகிராம் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளார் பும்ரா.

“இன்று காலை (திங்கட்கிழமை) அங்கட் ஜஸ்பிரீத் பும்ரா இவ்வுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்,” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2021 மார்ச் மாதம் பும்ராவிற்கும் சஞ்சனா கணேசன் என்பவருக்கும் கோவாவில் திருமணம் நடந்தது.

ஆசியக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பும்ரா, தனிப்பட்ட விடுப்பில் இலங்கையிலிருந்து இந்தியா சென்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்