‘ஆர்சனல் எப்போதும் அதிசய தருணங்களைச் சார்ந்திருக்க முடியாது’

‘ஆர்சனல் எப்போதும் அதிசய தருணங்களைச் சார்ந்திருக்க முடியாது’

1 mins read
e9a8e40b-3db4-4c2a-a788-9a791a2b52df
ஆட்ட முடிவில் தம் ஆட்டக்காரர்களுடன் சேர்ந்து வெற்றியைக் கொண்டு மிகெல் ஆர்டேட்டா. - படம்: இபிஏ

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவை 3-1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் தோற்கடித்தது.

ஆட்டத்தின் 96வது நிமிடத்திலும் ஆட்டம் முடிவடைய இருந்த இறுதி வினாடிகளிலும் ஆர்சனலுக்காக கோல் போட்டு டெக்லன் ரைசும் கேப்ரியல் ஜேசுசும் வெற்றியை உறுதிசெய்தனர்.

யுனைடெட்டை போராடி வென்ற ஆர்சனல் ஆட்டக்காரர்களின் மனப்போக்கை நிர்வாகி மிகெல் அர்டெட்டா பாராட்டினார். ஆனால், ஆட்டத்தின் இறுதியில் அதிசய தருணங்களைச் சார்ந்திருக்காமல் முன்னதாகவே வெற்றியை உறுதிசெய்யும் வழிமுறையை ஆட்டக்காரர்கள் தேடவேண்டும் என்று அர்டெட்டா சொன்னார்.

இதற்கு முந்தைய ஆட்டங்களில் நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட், கிரிஸ்டல் பேலஸ் குழுக்களை ஒரு கோல் வித்தியாசத்தில் வென்ற ஆர்சனல், கடந்த வாரம் ஃபுல்ஹம் உடனான ஆட்டத்தில் சமநிலை கண்டது. அடுத்ததாக செப்டம்பர் 17ஆம் தேதி எவர்ட்டனுடன் ஆர்சனல் பொருதுகிறது.

குறிப்புச் சொற்கள்