தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க பொது விருது: காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வெரவ்

1 mins read
dde7dff1-8fc1-4fd4-b2f9-daf971618769
ஸ்வெரவ் தரவரிசையில் ஆறாம் இடத்தில் உள்ள ஜானிக் சின்னரை 6-4, 3-6, 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: ஜெர்மானிய டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் தரவரிசையில் ஆறாம் இடத்தில் உள்ள யானிக் சின்னரை 6-4, 3-6, 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அமெரிக்கப் பொது விருதின் காலிறுதிக்கு முன்னேறினார்.

ஸ்வெரவ் காலிறுதியில் தற்போதைய நடப்பு வெற்றியாளர், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள கார்லோஸ் அல்கராசை எதிர்த்து விளையாடவுள்ளார்.

2022ஆம் ஆண்டு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்வெரவ் முக்கியமான பல தொடர்களில் பங்கேற்க முடியாமல் போனது.

தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஸ்வெரவ் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார்.

அதனால், காலிறுதி ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்வெரவ் 2020ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கப் பொது விருதின் இறுதிச்சுற்றில் கிண்ணத்தைத் தவறவிட்டார்.

குறிப்புச் சொற்கள்