தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்: உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

1 mins read
dc227c96-2630-42a3-a4d0-1470c0152f1c
படம்: - ஏஎஃப்பி

மும்பை: அடுத்த மாதம் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

காயத்தில் இருந்து மீண்டு வந்த கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் ஓட்டம் குவிக்கத் திணறும் சூர்யகுமார் யாதவ் தமது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சகல், திலக் வர்மா, பிரசித் கிரு‌ஷ்ணா ஆகியோருக்கு அணியில் இடமளிக்கப்படவில்லை.

அணித் தலைவராக ரோகித் சர்மாவும் துணைத் தலைவராக ஹார்திக் பாண்டியாவும் செயல்படுவர்.

அணி விவரம்: ரோகித் சர்மா, ‌ஷுப்மன் கில், விராத் கோஹ்லி, கே எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், இ‌‌‌ஷான் கி‌‌‌ஷன், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ‌ஷர்துல் தாக்குர், முகம்மது ‌‌ஷமி, முகம்மது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா.

குறிப்புச் சொற்கள்