தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலைப்பாம்புகளைப் பிடித்த கிரிக்கெட் நட்சத்திரம்

1 mins read
f8246e40-21b6-4dff-8f27-c42eb6f10d14
வீடுதுடைப்பானின் துணையுடன் மலைப்பாம்பைப் பிடிக்கும் கிளென் மெக்ராத். - காணொளிப்படம்: இன்ஸ்டகிராம்/மெக்ராத்

சிட்னி: களத்திலும் சரி, களத்திற்கு வெளியிலும் சரி! ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் கிளென் மெக்ராத் சவால்களை எதிர்கொள்வதில் வல்லவர்.

களத்தில் பந்தை அம்புபோல் துல்லியமாக வீசி விக்கெட்டுகளை அள்ளுவதில் கைதேர்ந்த வேகப் பந்துவீச்சாளரான மெக்ராத், தமது வீட்டில் நுழைந்த மலைப்பாம்புகளை அச்சமின்றிக் கையாண்டதே அதற்குச் சான்று.

இதுதொடர்பாக ஒரு காணொளியை வியாழக்கிழமையன்று தமது இன்ஸ்டகிராம் பக்கம் வழியாகப் பகிர்ந்துகொண்டார் 53 வயதான மெக்ராத்.

தமது வீட்டின் தரையில் கிடந்த ஒரு மலைப்பாம்பை, வீடு துடைப்பானின் துணையுடன் பிடித்தபடி வீட்டிற்கு வெளியே அவர் கொண்டுசெல்வது அக்காணொளியில் தெரிகிறது.

‘கோஸ்டல் கார்ப்பெட்’ இனத்தைச் சேர்ந்த அத்தகைய மூன்று மலைப்பாம்புகளை மெக்ராத் தமது வீட்டிலிருந்து அப்புறப்படுத்தினார்.

‘கோஸ்டல் கார்ப்பெட்’ வகை மலைப்பாம்புகள் நஞ்சில்லாதவை.

அச்சமின்றி மலைப்பாம்புகளைக் கையாண்ட மெக்ராத்தை இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

View post on Instagram
 

கடந்த 2007ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற மெக்ராத் 124 போட்டிகளில் விளையாடி, 583 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்