தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க பொது விருதை வென்றார் 19 வயது காஃப்

1 mins read
f5519e2c-62d9-4bdd-b991-02f0f9a477ec
தரவரிசையில் ஆறாம் நிலையில் உள்ள கோக்கோ காஃபிற்கு இது முதல் பொது விருது கிண்ணம். அவர் சபலென்காவை 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது கோக்கோ காஃப் பெண்களுக்கான அமெரிக்க பொது விருதை வென்றுள்ளார்.

தரவரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள அர்யான சபலென்காவை 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் காஃப் வீழ்த்தினார்.

சனிக்கிழமை இரவு ஆர்த்தர் ஆ‌ஷ் விளையாட்டரங்கில் நடந்த இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்தது.

முதல் செட்டை சபலென்கா எளிதாக வென்றார்.

இருப்பினும் சொந்த மண்ணில் ரசிகர்கள் கொடுத்த உற்சாகத்தால் காஃப் வேகமாகவும் சிறப்பாகவும் விளையாடி ஆட்டத்தையும் கிண்ணத்தையும் தன் வசப்படுத்தினர்.

தரவரிசையில் ஆறாம் நிலையில் உள்ள காஃபிற்கு இது முதல் பொது விருது கிண்ணம்.

2017ஆம் ஆண்டிற்குப் பிறகு பெண்களுக்கான அமெரிக்க பொது விருதை வெல்லும் முதல் அமெரிக்கர் காஃப்.

இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு சுலோன் ஸ்டெபென்ஸ் வென்றிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பின்னர் பெண்களுக்கான அமெரிக்க பொது விருதின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்க பதின்மவயதுப் பெண்ணும் காஃப் தான்.

இதற்கு முன்னர் பதின்ம வயது செரீனா வில்லியம்ஸ் 2001ஆம் ஆண்டு அமெரிக்க பொது விருதின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

குறிப்புச் சொற்கள்