இங்கிலாந்து- உக்ரேன் ஆட்டம் சமநிலையில் முடிந்தது

இங்கிலாந்து- உக்ரேன் ஆட்டம் சமநிலையில் முடிந்தது

1 mins read
ef2799a0-7dce-40bb-bfbf-f2275b626dac
ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில் உக்ரேனின் ஒலக்சேன்டர் சின்ஜென்கோ கோல் அடித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

விரோகிலா (போலந்து): யூரோ 2024 காற்பந்துப் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் சனிக்கிழமை இரவு இங்கிலாந்து அணியும் உக்ரேன் அணியும் மோதின.

அந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில் உக்ரேனின் ஒலக்சேன்டர் சின்ஜென்கோ கோல் அடித்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இங்கிலாந்தின் கைல் வால்க்கர் 41ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கத் தவறின.

தற்காப்பு ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியது உக்ரேன். அதனால் இங்கிலாந்து அணியின் முன்னணி ஆட்டக்காரர்கள் கோல்கள் அடிக்கத் தடுமாறினர்.

ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைத்தன.

இரு அணிகளும் பிரிவு ‘சி’யில் உள்ளன.

தற்போது பிரிவு ‘சி’ புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் 7 புள்ளிகளுடன் உக்ரேன் உள்ளது.

இத்தாலி நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது நிலையில் உள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் யூரோ 2024 காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெறும்.

குறிப்புச் சொற்கள்
காற்பந்து

தொடர்புடைய செய்திகள்