விராத் கோஹ்லி புதிய சாதனை

1 mins read
66b1f73f-98f4-483d-87b4-08cebc3792fa
அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 47வது சதமடித்த இந்தியாவின் விராத் கோஹ்லி. - படம்: ஏஎஃப்பி

கொழும்பு: இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற 2023 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றின் முக்கியமான போட்டியில் பாகிஸ்தானை 228 ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்து, இந்தியா மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 122 ஓட்டங்களைக் குவித்து, ஆட்டநாயகனாகத் தேர்வுபெற்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி, புதிய சாதனையையும் படைத்தார்.

கொழும்பு பிரேமதாசா அரங்கில் கோஹ்லி தொடர்ச்சியாக நான்காவது முறையாக சதம் போட்டுள்ளார். இதன்மூலம், தென்னாப்பிரிக்க முன்னாள் வீரம் ஹஷிம் ஆம்லாவின் சாதனையை அவர் சமன்செய்தார்.

அவ்வரங்கில் கடைசியாகத் தான் ஆடிய மூன்று ஆட்டங்களிலும் சதம் ( 128 ஓட்டங்கள், 131 ஓட்டங்கள், 110 ஓட்டங்கள்) அடித்திருந்தார் கோஹ்லி.

மேலும், 50 ஓவர் ஆசியக் கிண்ணத் தொடரில் அவர் நான்காவது முறையாக ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இதன்மூலம் 50 ஓவர் ஆசியக் கிண்ண வரலாற்றில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர் என்ற நவ்ஜோத் சிங் சித்து மற்றும் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை அவர் தகர்த்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்