போதைப்பொருள் விநியோகம்: கிரிக்கெட் வீரர்மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் விநியோகம்: கிரிக்கெட் வீரர்மீது குற்றச்சாட்டு

1 mins read
5754374a-bb8e-491b-b0ce-ff1212d33528
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்டூவர்ட் மெக்கில் (இடது). - கோப்புப் படம்: ஏஎஃப்பி

சிட்னி: போதைப்பொருள் விநியோக முயற்சியில் ஈடுபட்டதாகக் சந்தேகத்தின்பேரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று 52 வயது மெக்கில் கைது செய்யப்பட்டார். அவர் ஆஸ்திரேலியாவிற்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

தன்மீதான குற்றச்சாட்டை மெக்கில் இதுவரை மறுத்து வந்துள்ளார்.

கடந்த 2021 ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கிரெமொர்னே எனும் குடியிருப்புப் பகுதியில் சிலர் தன்னுடன் சண்டைக்கு வந்ததாகவும் தான் வலுக்கட்டாயமாக வாகனத்துக்குள் ஏற்றப்பட்டதாகவும் மெக்கில் கூறியிருந்தார். அந்த விவகாரம் உலகின் கவனத்தை ஈர்த்தது.

தான் வேறு இடத்துக்கு ஓட்டிச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு துப்பாக்கிமுனையில் மிரட்டப்பட்டதாகவும் மெக்கில் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்தக் காலகட்டத்தில் அவரின் காதலியாக இருந்தவரின் சகோதரர் உள்ளிட்ட அறுவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 300,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்