எவர்ட்டனை வாங்கிய அமெரிக்க முதலீட்டு நிறுவனம்

எவர்ட்டனை வாங்கிய அமெரிக்க முதலீட்டு நிறுவனம்

1 mins read
0b24a3df-1faf-4b07-88a6-acbaf18facb7
எவர்ட்டனில் 94.1 விழுக்காட்டுப் பங்குகளை 777 பார்ட்னர்ஸ் வாங்கியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான எவர்ட்டன், 777 பார்ட்னர்ஸ் எனும் அமெரிக்க முதலீட்டு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. 550 மில்லியன் பவுண்டுக்கும் (931 மில்லியன் வெள்ளி) அதிகமான தொகைக்கு அக்குழு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டனின் ஈரானிய வம்சாவளி செல்வந்தரான ஃபார்ஹாத் மொஷிரி எவர்ட்டனின் 94.1 விழுக்காட்டுப் பங்குகளை வைத்திருந்தார். அந்தப் பங்குகளை இப்போது 777 பார்ட்னர்ஸ் கைப்பற்றியுள்ளது.

இத்தாலியின் ஜெனோவா, பெல்ஜியத்தின் ஸ்டாண்டர்ட் லியெஜ் உள்ளிட்ட காற்பந்துக் குழுக்கள் 777 பார்ட்னர்சுக்குக்வீழ் உள்ளன. ஸ்பெயினின் சவியா, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் விக்டரி ஆகிய குழுக்களிலும் அந்நிறுவனம் பங்குகளை வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்