ஃபார்முலா 1: சிங்கப்பூர் சாலையில் மெருகேற்றிய மெக்லாரன் கார்

ஃபார்முலா 1: சிங்கப்பூர் சாலையில் மெருகேற்றிய மெக்லாரன் கார்

1 mins read
056bd924-36e6-47a6-ba61-b2fc8da128b2
மெக்லாரன் ஓட்டுநர்களான லான்டோ நோரிஸ், ஆஸ்கர் பியாஸ்டிரியுடன் இணைந்து ‘ஒகேஎக்ஸ்’ நிறுவனத்தின் ஹைதர் ரபிக் மெருகேற்றிய புது காரை வெளியிட்டார். - படம்: மெக்லாரன்/ஒகேஎக்ஸ்
multi-img1 of 3

ஃபார்முலா 1 கார் பந்தயங்களில் மிக முக்கியமான அணிகளில் மெக்லாரன் அணியும் ஒன்று.

60ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மெக்லாரன் நிறுவனம் அதன் ரசிகர்களை ஈர்க்க பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதே நேரம் பந்தயத்தில் புள்ளிகளை வெல்லவும் தனது காரை மெருகேற்றிக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பூர் இரவு கார் பந்தயத்திலும் ஜப்பான் பந்தயத்திலும் சீரிப்பாய மெக்லாரன் அதன் காரில் சில மாற்றங்களை செய்துள்ளது.

புதிய வண்ணங்கள், இரவில் மிளிரும் தோற்றம் என ‘ஸ்டெல்த் மோட்’ என்று அழைக்கப்படும் காரை மெக்லாரன் வடிவமைத்துள்ளது.

அந்தக் காரை அவ்வணியின் ஓட்டுநர்களான லான்டோ நோரிஸ், ஆஸ்கர் பியாஸ்டிரியுடன் இணைந்து ‘ஒகேஎக்ஸ்’ நிறுவனத்தின் ஹைதர் ரபிக் புதன்கிழமை வெளியிட்டார்.

இந்த பருவத்தின் அணிகளுக்கான புள்ளிப்பட்டியலில் மெக்லாரன் அணி 115 புள்ளிகளுடன் ஐந்தாவது நிலையில் உள்ளது.

சிங்கப்பூர் இரவு கார் பந்தயம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடக்கிறது.

குறிப்புச் சொற்கள்