பிரைட்டன் அபாரம்; யுனைடெட்டுக்கு அடிமேல் அடி

பிரைட்டன் அபாரம்; யுனைடெட்டுக்கு அடிமேல் அடி

1 mins read
b397817c-f026-44aa-857c-661afd510ab3
மான்செஸ்டர் யுனைடெட்டை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது பிரைட்டன். - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் தொடர் சரிவை எதிர்கொண்டு வருகிறது மான்செஸ்டர் யுனைடெட்.

பிரைட்டனுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3-1 எனும் கோல் கணக்கில் யுனைடெட் தோல்விகண்டது. இந்த லீக் பருவம் தொடங்கி தனது முதல் ஐந்து ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்துவிட்டது யுனைடெட்.

ஆட்டத்தில் அபாரமாக ஆடிய பிரைட்டன் 3-0 எனும் கோல் கணக்கில் முன்னுக்குச் சென்றிருந்தது.

20வது நிமிடத்தில் முன்னாள் யுனைடெட் வீரர் டேனி வெல்பெக் பிரைட்டனை முன்னுக்கு அனுப்பினார். பிறகு 53வது நிமிடத்தில் பேஸ்கல் குரோஸ் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார். 71வது நிமிடத்தில் ஜொவாவ் பெட்ரோ பிரைட்டனின் மூன்றாவது கோலைப் போட்டார்.

73வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் ஹேனிபல் மெஜ்பிரி யுனைடெட்டுக்கு ஆறுதல் கோலைப் போட்டார்.

சென்ற பருவம் நன்கு மீண்டு வரும் அறிகுறிகளைக் காண்பித்த யுனைடெட் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதே வேளையில் பெரிய குழுவாக உருவெடுத்து வருகிறது பிரைட்டன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்