தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடைசி நொடிகளில் தலையெழுத்தை மாற்றிய ஸ்பர்ஸ்

1 mins read
d1fb9dc6-30af-4cf5-a0d9-13d976bd7863
ஷெஃபீல்ட் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரின் முதல் கோலைப் போடும் ரிச்சார்லிசன் (வெள்ளை சட்டை அணிந்திருப்பவர்). - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாடடத்தில் கடைசி நொடிகளில் தோல்வியின் விளிம்பிலிருந்து வெற்றியைப் பறித்துக்கொண்டது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்.

ஷெஃபீல்ட் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் தோற்றுக்கொண்டிருந்தது ஸ்பர்ஸ். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் கடைசி மூன்று நிமிடங்களில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியேதாடு வெற்றி கோலையும் போட்டது இக்குழு.

புதிய நிர்வாகி அஞ்சி பொஸ்டக்கொக்லுவின்கீழ் பெரும் நம்பிக்கை தரும் வகையில் இந்த லீக் பருவத்தைத் தொடங்கியிருக்கிறது ஸ்பர்ஸ். அது வீண் போகுமோ என்ற அச்சம் எழ விடாமல் பார்த்துக்கொண்டது.

மற்ற பிரிமியர் லீக் ஆட்டங்களில் வுல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்சை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது லிவர்பூல். அதே கோல் எண்ணிக்கையில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை வென்றது லீக்கின் நடப்பு வெற்றியாளர் குழுவான மான்செஸ்டர் சிட்டி.

பிரென்ட்ஃபர்டை 1-0 எனும் கோல் கணக்கில் வென்று தான் சந்தித்த தொடர் சரிவை நிறுத்திக்கொண்டது நியூகாசல் யுனைடெட். சென்ற பருவம் மிகச் சிறப்பாக ஆடி பலரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நியூகாசல் இந்த ஆட்டத்துக்கு முன்பு மூன்று ஆட்டங்களில் தொடர் தோல்விகண்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்