விபத்து காரணமாக சிங்கப்பூர் பந்தயத்தில் இருந்து விலகிய ஸ்டிரால்

விபத்து காரணமாக சிங்கப்பூர் பந்தயத்தில் இருந்து விலகிய ஸ்டிரால்

1 mins read
8880e085-eace-4d7b-89aa-d779b8bef1d0
‘குவாலிஃபயர்’ இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற வேகமாகக் காரை ஓட்டிய ஸ்டிரால் வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்தார். - படம்: எஃப் 1/ சமூக ஊடகம்

சனிக்கிழமை இரவு நடந்த ‘குவாலிஃபயர்’ முதல் சுற்றில் அஸ்டன் மார்ட்டின் ஓட்டுநர் லான்ஸ் ஸ்டிரால் பெரும் விபத்தில் சிக்கினார்.

‘குவாலிஃபயர்’ இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற வேகமாகக் காரை ஓட்டிய ஸ்டிரால் வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்தார்.

அதனால் அவரின் கார் சாலையோரத் தடுப்புகளில் மோதியது. அதில் காரின் ஒரு பக்கம் கடுமையாகச் சேதமடைந்தது.

காரில் இருந்து ஸ்டிரால் உடனடியாக வெளியேறினார். அதன் பின்னர் மருத்துவநிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

ஸ்டிரால் உடல்நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை, இருப்பினும் அவரிடம் விபத்தில் ஏற்பட்ட தாக்கம் இருப்பதால் சிங்கப்பூர் பந்தயத்தில் இருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அஸ்டன் மார்ட்டின் தகவல் வெளியிட்டது.

ஸ்டிரால் அடுத்து ஜப்பானில் நடக்கவிருக்கும் பந்தயத்தில் கலந்துகொள்வார் என்று அஸ்டன் மார்ட்டின் கூறியது.

குறிப்புச் சொற்கள்