தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவிற்கு ஆசியக் கிண்ணம்

1 mins read
58da7ddd-6649-40d1-80a6-94c7bf8e0815
சிறப்பாகப் பந்துவீசிய முகம்மது சிராஜ் 21 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். - படம்: ஏஎஃப்பி

கொழும்பு: இறுதிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியை மிக எளிதாக வென்று, ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்திய அணி.

பூவா தலையில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் பந்தடித்தது.

ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் ஜஸ்பிரீத் பும்ரா முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

முகம்மது சிராஜ் நான்காவது ஓவரில் மட்டும் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி, ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார்.

இறுதியில் இலங்கை அணி 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 21 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மிக மிக எளிதான இலக்கை விரட்டிய இந்திய அணி 6.1 ஓவர்களில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தொடக்கப் பந்தடிப்பாளர்கள் ‌ஷுப்மன் கில் 27 ஓட்டங்களையும் இ‌‌ஷான் கி‌‌‌ஷன் 23 ஓட்டங்களையும் எடுத்தனர்.

குறிப்புச் சொற்கள்