ரொனால்டோவை காண திரண்ட ஆயிரக்கணக்கான ஈரானிய ரசிகர்கள்

1 mins read
29dfcc97-dbc0-48d8-bceb-b61e501b3a2f
ரொனால்டோவைக் காண அல் நசர் அணி தங்கியிருக்கும் ஹோட்டல் வளாகத்திலும் ரசிகர் படை நுழைந்தது. - படம்: இபிஏ
multi-img1 of 2

டெஹ்ரான்: காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ‘ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்’ தொடரின் பிரிவுச் சுற்று ஆட்டத்தில் பங்கேற்க ஈரான் வந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு ரொனால்டோ வழிநடத்தும் அல் நசர் அணி ஈரானின் பெர்செப்போலிஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் ரொனால்டோவைக் காண ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்கள் அல் நசர் அணியின் பேருந்து பின்னால் ஓடினர்.

அதுபோக அல் நசர் அணி தங்கியிருக்கும் ஹோட்டல் வளாகத்திலும் ரசிகர் படை நுழைந்தது.

ரசிகர்கள் குவிந்துள்ள காணொளியும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

டெஹ்ரானின் பல பகுதிகளில் ரொனால்டோவின் சட்டை அணிந்து ரசிகர்கள் வலம் வருகின்றனர்.

அதிக அளவில் ரசிகர்கள் திரண்டதால் அல் நசர் அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்