கிரிக்கெட் உலகக் கிண்ணப் பாடல்

1 mins read
613815a3-e28b-48a5-a8ba-9135ec545764
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தத் தயாராகி வருகிறது இந்தியா. - படம்: இபிஏ

புதுடெல்லி: ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்துகொள்கின்றன. போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோதவுள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்நிலையில் இந்தியா ஏற்று நடத்தும் இப்போட்டியைப் பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) வெளியிடவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்தப் பாடலில் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங், இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் பாடல் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்