தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போராடி வென்ற மான்செஸ்டர் சிட்டி

1 mins read
fcc3356a-d0b0-4f48-9079-6e5849fcd4a1
ரெட் ஸ்டார் பெல்கிரேடுக்கு எதிரான ஆட்டத்தின் சிட்டியின் முதல் கோலைப் போடும் ஹூலியன் அல்வாரஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி, செர்பியாவின் ரெட் ஸ்டார் பெல்கிரேடை சற்று போராடி வெல்ல நேரிட்டது.

இந்த ‘ஜி’ பிரிவு ஆட்டத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான சிட்டி 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது. எனினும், 45வது நிமிடத்தில் முதலில் முன்னுக்குச் சென்றது ரெட் ஸ்டார்.

ஆனால் இரண்டே நிமிடங்களில் சிட்டியின் ஹூலியன் அல்வாரஸ் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். அதற்குப் பிறகு 60வது நிமிடத்தில் அல்வாரஸ் மீண்டும் கோல் போட்டு சிட்டியை முன்னுக்கு அனுப்பினார்.

73வது நிமிடத்தில் ரோட்ரி, சிட்டியின் மூன்றாவது கோலைப் போட்டார். ஆட்டத்தில் பிரிமியர் லீக் நடப்பு வெற்றியாளருமான சிட்டி வென்றிருந்தாலும் அக்குழு சற்று சிரமப்பட்டது பல தரப்பினரிடையே சிறிதளவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்