கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி பதக்கத்தை உறுதிசெய்தது

கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி பதக்கத்தை உறுதிசெய்தது

1 mins read
0ab5e846-4ca9-4a0d-a39f-a7bf94e1e008
படம்: - தமிழ் முரசு

ஹாங்ஜோ: சீனாவின் ஹாங்ஜோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. அந்தப் போட்டிகளின் மகளிர்க்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பங்ளாதேஷ் அணிகள் விளையாடி வருகின்றன.

முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் அணி இந்திய வீராங்கனைகளின் அபார பந்துவீச்சால் 17.5 ஓவர்களில் 51 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 52 ஓட்டங்கள் அடித்தால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 8.2 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை இந்திய மகளிர் அணி வெல்வது உறுதியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்