மேசைப் பந்து போட்டி: நேப்பாளத்தை வென்றனர் இந்திய மகளிர்

1 mins read
6779f468-1621-4439-b748-9f265d95ae1a
படம்: - தமிழ் முரசு

ஹாங்சோ: 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு பெண்களுக்கான மேசைப் பந்துப் போட்டி நடைபெற்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட முதல் நிலை சுற்றில், இந்தியா மற்றும் நேப்பாள வீரர்கள் விளையாடினர்.

ஹாங்சோ இந்தியாவுக்கும் நேப்பாளத்திற்கும் இடையே நடந்த அந்தப் போட்டியில் இந்தியா 3-0 என்ற ஆட்டக் கணக்கில் நேப்பாளத்தை வென்றது.

ஆடவர் மேசைப் பந்துப் போட்டியில் கஜகஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்தியாவின் சரத் கமல் , கஜகஸ்தானின் கென்சிகுலோவ்- ஐ 5-11, 7-11, 11-9, 11-8, 11-9 என்ற ஆட்டக் கணக்கில் வீழ்த்தினார்.

குறிப்புச் சொற்கள்