தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

99 ஓட்டங்களில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா

1 mins read
d1d01849-556d-4ecb-9157-7a107311b585
ஆட்டத்தில் பந்தைப் பிடிக்கும் முயற்சியில் இந்தியாவின் ஷுப்மன் கில். - படம்: ஏஎஃப்பி

இந்தூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் டக்வர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறைப்படி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகண்டது இந்தியா.

அதனைத் தொடர்ந்து தொடரில் 2-0 எனும் புள்ளிக் கணக்கில் இந்தியா முன்னணி வகிக்கிறது. மூன்று ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் இந்தியா வெல்வது உறுதியாகிவிட்டது.

முதலில் பந்தடித்த இந்தியா ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ஓட்டங்களைக் குவித்தது. இந்ரியாவின் ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் கில் இருவரும் சதம் அடித்தனர்.

அதற்குப் பிறகு பந்தடித்த ஆஸ்திரேலியா 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்