சுவர்ப்பந்தில் இந்திய அணி வெற்றி

சுவர்ப்பந்தில் இந்திய அணி வெற்றி

1 mins read
ea314ec0-6d54-4428-98bb-7994d19ada60
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் போட்டியில் பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி. - படம்: ஊடகம்

ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 23ஆம் தேதி தொடங்கி சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்று வருகின்றன.

செவ்வாய்க்கிழமை நடந்த ஆண்களுக்கான சுவர்ப்பந்துப் போட்டியில் சவுரவ் கோஷ், அபய்சிங், மகேஷ் மங்கோன்கர், ஹரிந்தர் பால் சந்து ஆகியோரைக் கொண்ட இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.

இதேபோல், பெண்கள் அணி பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங், தன்வி கண்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது.

குறிப்புச் சொற்கள்