இலங்கை அணிக்குப் பின்னடைவு

இலங்கை அணிக்குப் பின்னடைவு

1 mins read
1e0afee8-4f4b-4daf-8165-ebde2c98bf0b
-

கொழும்பு: வேகப் பந்துவீச்சாளர் துஷ்யந்த சமீரா, ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க இருவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியில் இடம்பெறாதது அவ்வணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்துள்ள அவ்விருவரும் இன்னும் குணமடையவில்லை. இதனையடுத்து, இலங்கை அணியில் ஆல்ரவுண்டர் துஷான் ஹேமந்த சேர்க்கப்பட்டுள்ளார். சமிக்க கருணரத்னே ‘ரிசர்வ்’ ஆட்டக்காரராக அணியுடன் செல்கிறார்.

இலங்கை அணி விவரம்: தாசுன் ஷானக (அணித்தலைவர்), குஷல் மெண்டிஸ், குஷல் பெரேரா, பத்தும் நிஷாங்க, திமுத் கருணாரத்னே, சடீரா சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமந்த, மகீஷ் தீக்ஷானா, துனித் வெல்லாலகே, கசுன் ராஜித, மதீஷா பதிரனா, லகிரு குமார, தில்ஷான் மதுசங்க.