தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2026 உலகக் கிண்ண காற்பந்து: விளையாட்டு அரங்கங்கள் அறிவிப்பு

1 mins read
0ed2a276-f375-402b-ad1e-7488480f863b
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜெனிவா: பிஃபா எனப்படும் அனைத்துலக காற்பந்து சம்மேளனம் 2026 உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கான விளையாட்டு அரங்கங்களை அறிவித்துள்ளது.

போட்டியை கனடா, மெக்சிக்கோ, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் ஏற்று நடத்துகின்றன.

சியாட்டல், சான் ஃபிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலிஸ், கன்சாஸ் சிட்டி, டல்லஸ், அட்லாண்டா, ஹூஸ்டன், பாஸ்டன், ஃபிலடெல்பியா, மயாமி, நியூயார்க் என அமெரிக்காவில் மட்டும் 11 விளையாட்டரங்கங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கனடாவில் டொரோன்டோ, வான்கூவர் நகரங்களும், மெக்சிக்கோவில் மெக்சிக்கோ சிட்டி, கவுதலஜாரா, மான்டெர்ரி ஆகிய மூன்று நகரங்கள் போட்டியை ஏற்று நடத்துகின்றன.

உலகக் கிண்ணக் காற்பந்துபப் போட்டிகளை முதல்முறையாக மூன்று நாடுகள் ஏற்றுநடத்துகின்றன.

அதே நேரம் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டில் 48 அணிகள் விளையாடவுள்ளன.

2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 32 அணிகள் மட்டுமே இடம்பெற்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்