தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செல்சி அணியின் சட்டையில் புதுப்பெயர்

1 mins read
8b62e8ae-d4ed-4359-8081-fd542554f7db
படம்: - தமிழ்முரசு

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் முக்கியமான அணிகளில் ஒன்று செல்சி.

இந்த பருவத்தில் அந்த அணி சரியாக சோபிக்கவில்லை.

தொடர் தோல்விகளால் செல்சி அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 14ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் சட்டையில் இடம்பெற 40 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தத்தை அமெரிக்க நிறுவனமான ‘இன்பைனைட் அத்லெட்’ செய்துள்ளது.

இருப்பினும் இது எத்தனை ஆண்டு ஒப்பந்தம் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

சட்டையின் முன்பக்கத்தில் நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்டிருக்கும்.

தற்போது செல்சி அணியின் முன்பக்க சட்டையில் ‘திரி’ நிறுவனத்தின் அடையாளம் உள்ளது.

‘திரி’ நிறுவனத்தின் ஒப்பந்தம் இந்தப் பருவத்துடன் முடிவடைகிறது.

புது ஒப்பந்தம் மூலம் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளம்பர ஆதரவு மூலம் அதிக வருவாய் ஈட்டும் அணிகள் பட்டியலில் செல்சி நுழைந்துள்ளது.

ஆர்சனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் அணிகள் அண்மையில் நல்ல விளம்பர ஆதரவு வருவாய் பெற்றன.

லிவர்பூல் அணி ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கியுடன் ஆண்டுக்கு 50 மில்லியன் பவுண்ட்ப்பந்தம் செய்துள்ளது.

மான்செஸ்டர் யுனைட்டட்  அணி சட்டையின் முன் பக்கத்தில் நிறுவனத்தின் பெயர் வர ஆண்டுக்கு 60 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தம் செய்கிறது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி அணி 70 மில்லியன் பவுண்ட் கேட்கிறது.

குறிப்புச் சொற்கள்