‘ஹாட்ரிக்’ எடுத்த ஸ்டார்க்

1 mins read
256971e4-2805-4e7d-8fec-538d9f09410c
மிட்சல் ஸ்டார்க் - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

திருவனந்தபுரம்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் நெதர்லாந்தும் சனிக்கிழமை இரவு விளையாடின.

மழை காரணமாக ஆட்டம் 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியா 166 ஓட்டங்கள் எடுத்தது.

இலக்கை விரட்டிய நெதர்லாந்து மிட்செல் ஸ்டார்க் வேகத்தால் தடம் புரண்டது.

முதல் ஓவரின் கடைசி இரு பந்துகளிலும், மூன்றாவது ஓவரின் முதல் பந்திலும் விக்கெட் வீழ்த்தி ஸ்டார்க் ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்தார்.

இந்நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்