ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சறுக்குப் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை இந்தியா அறுவடை செய்துள்ளது.
சறுக்குப் போட்டியில் (ரோலர் ஸ்கேட்டிங்) ஆண்களுக்கான 3,000 மீட்டர் ரிலே பந்தயத்தில் ஆர்யன்பால், ஆனந்த், சித்தாந்த் மற்றும் விக்ரம் உள்ளிட்ட இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது.
ரோலர் ஸ்கேட்டிங் பெண்களுக்கான அதிவேக 3,000 மீட்டர் ரிலே சறுக்குப் போட்டியில் இந்திய வீராங்கனைகளான ஆரத்தி கஸ்தூரி ராஜ், ஹீரல், சஞ்சனா மற்றும் கார்த்திகா ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
பெண்களுக்கான சறுக்குப் போட்டியில் ஹீரல் சித்து ஒட்டமெடுக்கிறார். மூவர் அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். இக்குழு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. - படம்: ஏஎஃப்பி