தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் நெதர்லாந்து

1 mins read
16e3ff56-4db9-452a-9dab-440267fb028d
படம்: - ஊடகம்

ஹைதராபாத்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை நெதர்லாந்து சந்திக்கிறது.

இருப்பினும் நெதர்லாந்து அணி ஆட்டத்தில் கடுமையாகப் போட்டிக்கொடுக்கும் என்று எண்ணப்படுகிறது.

ஆட்டம் ஹைதராபாத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு நடக்கவுள்ளது.

வியாழக்கிழமை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் முதலாட்டம் அகமதாபாத்தில் தொடங்கியது. அதில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதின.

முதல் ஆட்டம் என்பதால் அதிக அளவில் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பூவா தலையா போடும் போது விளையாட்டரங்கில் மிகக்குறைவான ரசிகர்களே இருந்தனர்.

பகல் இரவு ஆட்டம் என்பதாலும் ஆட்டம் பிற்பகல் நேரத்தில் தொடங்கியதாலும் ரசிகர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. மாலை நேரத்தில் விளையாட்டரங்கில் ஓரளவு ரசிகர் கூட்டம் இருந்தது.

குறிப்புச் சொற்கள்