தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெங்கி காய்ச்சல் ஏற்பட்ட ஷுப்மன் கில்

1 mins read
95f4070d-7931-4181-b2b9-c703131f6e0f
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஷுப்மன் கில். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லுக்கு டெங்கி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஆட்டத்தில் அவர் இடம்பெறமாட்டார் என்று பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மைக் காலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கில் இந்தியாவுக்கு ஆக அபாரமாக விளையாடும் பந்தடிப்பாளராக விளங்கி வந்துள்ளார். இனி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கில்லுக்குப் பதிலாக இஷான் கிஷன் விளையாடுவார் என்று இஎஸ்பிஎன் ஊடகத்தின் கிரிக்கின்ஃபோ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இஷான் கிஷனும் அணித் தலைவர் ரோகித் சர்மாவும் இந்தியாவின் தொடக்கப் பந்தடிப்பாளர்களாக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிஷனுக்குப் பதிலாக கேஎல் ராகுலும் களமிறக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

கில் புதன்கிழமை, வியாழக்கிழமை இரண்டு நாள்களிலும் பயிற்சிகளில் பங்கேற்கவில்லை. அவர் சளிக்காய்ச்சலுக்கு ஆளாகியிருப்பார் என்று இந்திய அணியின் நிர்வாகக் குழு நம்பிக்கை கொண்டிருந்தது.

இறுதியில் கில் டெங்கி காய்ச்சல் ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்