தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகக் கிண்ண கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்திய பங்ளாதே‌ஷ்

1 mins read
35e72361-82c0-41c3-9387-12c58f990c15
எளிதான இலக்கை விரட்டிய பங்ளாதே‌ஷ் அணி 34.4ஆவது ஓவரில் 158 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. - படம்: ஏஎஃப்பி

தர்மசாலா: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் பங்ளாதே‌ஷ் அணி ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்தியது.

ஆட்டம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா விளையாட்டரங்கில் நடந்தது.

பூவா தலையா வென்ற பங்ளாதே‌ஷ் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.

ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாசைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஓட்டம் குவிக்கத் தடுமாறினர்.

ஒருகட்டத்தில் 112 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆப்கானிஸ்தான் அணி, 37.2 ஓவர்களில் 156 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

எளிதான இலக்கை விரட்டிய பங்ளாதே‌ஷ் அணி பொறுமையாக ஓட்டங்களைச் சேர்த்தது. இறுதியில், அந்த அணி 34.4ஆவது ஓவரில் 158 ஓட்டங்கள் எடுத்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

குறிப்புச் சொற்கள்