தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல்முறையாக பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியா

1 mins read
8ec848c8-38d3-45bc-845a-6dea2633af08
பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சட்விக் சாய்ராஜ், சிராங் கூட்டணி தென் கொரியாவை 21-18, 21-16 என வீழ்த்தியது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டில் இந்தியாவின் வெற்றிநடைதொடர்கிறது.

பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ஆண்கள் அணி முதல் முறையாக தங்கம் வென்று சாதித்துள்ளது.

சட்விக் சாய்ராஜ், சிராங் கூட்டணி தென் கொரியாவை 21-18, 21-16 என வீழ்த்தியது.

ஆண்களுக்கான தனிநபர் அம்பு எய்தலில் இந்தியாவின் ஓஜாஸ் பிரவீன் தங்கப்பதக்கத்தையும் அபிசேக் வர்மாக் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

கபடிப் போட்டியில் ஆண்கள் அணி இறுதியாட்டத்தில் ஈரானை வீழ்த்தியது. அதேபோல் பெண்கள் கபடி அணியும் இறுதியாட்டத்தில் தைவானை வீழ்த்தி வாகைசூடியது.

சதுரங்க குழுப் போட்டியில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது.

ஆண்களுக்கான 83 கிலோகிராம் மல்யுத்த பிரிவில் தீபக் பூன்யா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மகளிர் ஹாக்கி அணி ஜப்பானை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

குறிப்புச் சொற்கள்