தொடக்கமே சிக்சர்!

1 mins read
9302a2ed-eb94-4431-97db-90e0806b00a8
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோனி பேர்ஸ்டோ. - படம்: ராய்ட்டர்ஸ்

நடப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் ஓட்டமே சிக்சராக அமைந்தது ரசிகர்களுக்கு வியப்பும் மகிழ்ச்சியும் அளிப்பதாக அமைந்தது.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை அப்படி அதிரடியாகத் தொடங்கினார் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ. டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தை அவர் ‘ஸ்குவேர் லெக்’ திசையில் ‘லெக் கிளான்ஸ்’ முறையில் தூக்கி அடிக்க, அது எல்லையைத் தாண்டி விழுந்தது.

குறிப்புச் சொற்கள்