தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இலங்கை

1 mins read
77439e5e-a47f-44ca-a9e7-57766fd1a553
பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எளிதாக தோற்கடித்தது - படம்: ஏஎஃப்பி

ஹைதராபாத்: உலக்கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் எட்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன.

ஆட்டம் ஹைதராபாத்தில் நடக்கிறது. சிங்கப்பூர் நேரப்படி மாலை 4:30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எளிதாக தோற்கடித்தது. இருப்பினும் பாகிஸ்தானின் முன்னணி பந்தடிப்பாளர்கள் சரியாக ஓட்டங்கள் குவிக்கவில்லை.

மறுபக்கம் இலங்கை அணி தென்னாப்பிரிக்காவிடம் மோசமான தோல்வியைச் சந்தித்தது. அந்த ஆட்டத்தில் இலங்கையின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாகக் காணப்பட்டது.

அதனால் இந்த ஆட்டத்தில் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கும் பாகிஸ்தான் பந்தடிப்பாளர்களுக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற்பகல் 1 மணிக்கு தர்மசாலாவில் இங்கிலாந்து அணி பங்களாதே‌சுடன் விளையாடுகிறது.

நடப்பு வெற்றியாளரான இங்கிலாந்து முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. அதனால் பங்களாதே‌‌ஷை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் அதில் களமிறங்குகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்