தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்பந்து வீரர்மீது பட்டாசு வீச்சு

1 mins read
f0534e94-7cb7-497e-ba67-20f398b73cbe
ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ரசிகர்கள் கிளர்மோ அணியின் கோல்காப்பாளர் மோரி டியாவ்மீது பட்டாசு வீசினர். இதில் மோரி காயமடைந்தார் - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: பிரெஞ்‌சு லீக் 1 காற்பந்து போட்டியில் ஞாயிற்றுக்கிழமை மோன்ட்பெலியே அணியும் கிளர்மோ அணியும் மோதின.

ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ரசிகர்கள் கிளர்மோ அணியின் கோல்காப்பாளர் மோரி டியாவ்மீது பட்டாசு வீசினர்.

இதில் மோரி காயமடைந்தார். பின்னர் அவர் மருத்துவ உதவியாளர்கள் துணையுடன் ஆடுகளத்தில் இருந்து அவர் வெளியேறினார்.

பின்னர், விளையாட்டாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு ஆட்டம் கைவிடப்பட்டது.

ஆட்டம் நிறுத்தப்பட்டபோது மோன்ட்பெலியே 4-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்