தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவைவிட்டு வெளியேறிய பாகிஸ்தானிய வருணனையாளர்

1 mins read
ae3b9961-5abf-46f7-9d59-6edff260e2f3
பாகிஸ்தானிய வருணனையாளர் ஸைனப் அப்பாஸ். - படம்: ஃபேஸ்புக்/ஸைனப் அப்பாஸ்

மும்பை: இந்தியாவில் நடந்து வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை வருணனை செய்ய அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) ஒரு குழுவை அமைத்துள்ளது.

அதில் பாகிஸ்தானை சேர்ந்த ஸைனப் அப்பாஸூம் ஒருவர்.

அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ஊடகத்தில் இந்தியர்களை புண்படுத்தும் விதமாக பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த பதிவுகள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. வழக்கறிஞர் ஒருவர் ஸைனப்புக்கு எதிராக வழக்கும் தொடுத்துள்ளார்.

இந்நிலையில், ஸைனப் இந்தியாவைவிட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸைனப் தமது சொந்த காரணங்களுக்காக தான் இந்தியாவைவிட்டு வெளியேறியதாக ஐசிசி கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்