தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அகமதாபாத் சென்றார் கில்

1 mins read
221d304a-daba-4c42-b05d-f966c18fa728
படம்: -  ஏஎஃப்பி

சென்னை: டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் அகமதாபாத் சென்றுள்ளார்.

டெங்கி காரணமாக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் கில் பங்கேற்கவில்லை.

சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த கில், காய்ச்சலில் இருந்து தேறியதால் அகமதாபாத் சென்றதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

அகமதாபாத் ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடக்கூடியவர் கில். இருப்பினும் அந்த ஆட்டத்தில் கில் களமிறங்குவது சந்தேகம்தான்.

அடுத்த வாரம் வியாழக்கிழமை (அக்டோபர் 19) புனேயில் இந்தியா, பங்ளாதே‌ஷ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

அந்த ஆட்டத்தில் கில் களமிறங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்