கிரிக்கெட்: முதல் வெற்றிக்காக போராடும் ஆஸ்திரேலியா

1 mins read
41477b70-7cd1-473f-8e6f-21ad29a0d776
ஆஸ்திரேலிய அணிக்கு அதன் பந்தடிப்பு பிரிவு போதிய ஓட்டங்கள் எடுக்காமல் தடுமாறுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

லக்னோ: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 14வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியுடன் திங்கட்கிழமை மோதுகிறது.

ஆட்டம் லக்னோ விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி மாலை 4:30 மணிக்கு தொடங்கும்.

இரு அணிகளும் தங்களது முதல் வெற்றிக்காகப் போராடுகின்றன.

ஆஸ்திரேலிய அணிக்கு அதன் பந்தடிப்பு பிரிவு போதிய ஓட்டங்கள் எடுக்காமல் தடுமாறுகிறது. இலங்கை அணிக்கு அதன் பந்துவீச்சு பிரிவு ஓட்டங்களை வாரிவழங்குகிறது.

இந்நிலையில் இலங்கை அணித்தலைவர் த‌ஷ்சுன் ‌‌ஷனக்கா தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து விலகினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்