தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போஸ்னியாவைப் பந்தாடிய ரொனால்டோ

1 mins read
14802326-047b-4179-952c-d9f5b2295a06
நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். - படம்: இபிஏ

செனிகா (போஸ்னியா): யூரோ 2024 காற்பந்து கிண்ணத்திற்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் போஸ்னியா & ஹெர்சகோவினா அணியை 5-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வீழ்த்தியது.

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.

அடுத்த ஆண்டு ஜெர்மனியில் நடக்கவிருக்கும் யூரோ 2024 காற்பந்து கிண்ணத்திற்கு போர்ச்சுகல் அணி ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டது.

தகுதிச் சுற்று ஆட்டம் அனைத்திலும் போர்ச்சுகல் வெற்றி பெற்றுள்ளது.

போர்ச்சுகல் அணியின் பயிற்றுவிப்பாளராக ரொபர்ட்டோ மார்ட்டினஸ் நியமிக்கப்பட்டதிலிருந்து அவ்வணி எந்த ஆட்டத்திலும் தோற்கவில்லை.

அவரது பயிற்சியின்கீழ், போர்ச்சுகல் அணி எட்டு ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வாகை சூடியுள்ளது

குறிப்புச் சொற்கள்