தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தான் வீரர்கள் காய்ச்சலால் பாதிப்பு

1 mins read
3ade54ce-ec91-451c-a11e-1f96b79d575e
படம்: - இபிஏ

பெங்களூரு: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை பெங்களூரில் எதிர்கொள்கிறது. 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், சிலர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த அணியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். 

தொடக்கப் பந்தடிப்பாளர் அப்துல்லா ஷஃபிக் அவரது அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஷகீன் ‌‌‌ஷா அஃப்ரிடி, சவுத் ‌‌‌ஷகீல், ஸ்அமான் கான் ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 

கடந்த ஆட்டத்தில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வியடைந்தது.

அதனால், ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் பாகிஸ்தான் கடும் போட்டிதரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்போது முன்னணி வீரர்களுக்கு காய்ச்சல் கண்டுள்ளது அவ்வணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள பாகிஸ்தான், இரண்டில் வெற்றிபெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்