தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெய்மார் அறுவை சிகிச்சை செய்து கொள்ளக்கூடும்

1 mins read
0b5bb933-e292-4a80-a45b-7eee2fdb48d8
படம்: - ராய்ட்டர்ஸ்

சாவ் பாவ்லோ: பிரேசில் காற்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மாருக்கு இடது கால் மூட்டில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

செவ்வாய்க்கிழமை, 2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதி ஆட்டத்தில் பிரேசில் அணி உருகுவே அணியுடன் மோதியது.

ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் நெய்மாரின் இடது கால் மூட்டில் உள்ள தசைநாரில் காயம் ஏற்பட்டது.

வலியால் துடித்த 31 வயது நெய்மார், கண்ணீர் மல்க திடலில் இருந்து வெளியேறினார்.

நெய்மாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்ததாக பிரேசில் காற்பந்து சங்கம் தெரிவித்தது.

அறுவை சிகிச்சைக்கான தேதி பற்றி சங்கம் தகவல் வெளியிடவில்லை.

கடந்த மார்ச் மாதம் நெய்மார் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதனால் கிட்டத்தட்ட ஆறு மாதம் அவர் விளையாடவில்லை.

தற்போது நெய்மாருக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வர மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்