சச்சின் சத சாதனையை நோக்கி கோஹ்லி

1 mins read
9b3167e3-524e-4133-a473-1ff6f018d1e0
பங்ளாதே‌ஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்  ‘சிக்ஸ்’ அடித்து சதத்தை பதிவு செய்தார் விராத் கோஹ்லி. - படம்: ஏஎஃப்பி

புனே: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பங்ளாதே‌ஷ் அணிக்கு எதிராக சதம் விளாசினார் விராத் கோஹ்லி.

அது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கோஹ்லி அடிக்கும் 48ஆவது சதம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் 49 சதங்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.

கோஹ்லி இந்த உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக பந்தடித்து வருவதால் சச்சின் சாதனையை அவர் விரைவில் முறியடிப்பார் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

வியாழக்கிழமை மாலை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்ளாதே‌ஷ் அணி 256 ஓட்டங்கள் எடுத்தது.

இலக்கை விரட்டிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா (48), ஷுப்மன் கில் (53) ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது.

அதன் பின்னர் வந்த கோஹ்லி ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

இறுதிக்கட்டத்தில் அணியின் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதே நேரம் கோஹ்லி சதம் அடிக்க 3 ரன்கள் தேவைப்பட்டது. 41.3 ஓவரில் கோஹ்லி ‘சிக்ஸ்’ அடித்து சதத்தை பதிவு செய்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார்.

குறிப்புச் சொற்கள்